இசி, மை அழியாதது என்பதை நிரூபித்துக் காட்டியது

1 inkதேர்தல் ஆணையம் (இசி), கோலா பெசுட் இடைத் தேர்தலில் பயன்படுத்தும் மை 13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தியதுபோல் அல்லாமல் தரமானது என்பதை நிறுவ செய்முறைக் காட்சி ஒன்றை இன்று நடத்தியது.

பல செய்தியாளர்கள் அதில் பங்கேற்றனர்.

மலேசியாகினி செய்தியாளர், அந்த மையை ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் நீரில் கழுவ முயன்றார். சோப் போட்டுக் கழுவிய பின்னரும் அது போகவில்லை.

சிறிது நேரம் கழித்து அது மேலும் கருமையாயிற்று.