ரமதான் மாதத்தில் தங்கள் முகநூல் பக்கத்தில் bak kut teh வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் பதிவைச் சேர்த்தது, தங்கள் வலைப்பதிவுகளில் ஆபாச படங்களை சேர்த்தது ஆகியவை தொடர்பாக தங்கள் மீது கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களை சர்ச்சைக்குரிய அல்வின் தான், விவியன் லீ ஜோடி மறுத்துள்ளது.
தான் ஜேய் யீ என்னும் முழுப் பெயரைக் கொண்ட 15 வயதான அல்வின் தான், லீ மே லிங் என்ற முழுப் பெயரைக் கொண்ட 24 வயது லீ மே லிங்
ஆகியோருக்கு எதிராக அந்தக் குற்றச்சாட்டுக்கள் நீதிபதி முர்தாஸாடி அம்ரான் முன்னிலையில் வாசிக்கப்பட்டன.
ஜுலை 11க்கும் 12க்கும் இடையில் இரவு மணி 10.48 வாக்கில் அவர்கள் அந்தக் குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.
முதலாவது குற்றத்துக்கு 5,000 ரிங்கிட் வரை அபராதமும் அல்லது மூன்று ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனையும் அல்லது இரண்டுமே விதிக்கப்படலம். இரண்டாவது குற்றத்துக்கு ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட முடியும்.
இதை இப்ராகிம் அலி ஜுல்கிப்லி நோர்டின் செய்த வேலையாக இருக்குமோ காரணம் படத்தில் உள்ளவர்கள் இவர்கள் மூளை உள்ளவர்கள் தவளையோ சீனரை PKRyum அழிக்க மலம் கூட சாப்பிட தயங்கமாட்டான் என்றே இவன் நடவடிக்கையை வைத்து எண்ண தோன்றுகிறது என்ன சரிதானே ஆசிரியரே
இவர்கள் மீது குற்றம் சுமத்தப் பட்டு விசாரிப்பது முறைதான். இதே நாயம் இப்ராகிம் அலி மற்றும் நோர்டினிடம் ஏன் காட்டவில்லை? ஒரு நாட்டில் இது போன்ற ப்பர படச்ச விசாரணைகள் அழிவிக்கு இட்டுச்செல்லும்.