நான்கு பெசுட் அம்னோ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட கடலோர நில விவகாரம் பெயர் குறிப்பிட விரும்பாத தரப்பு ஒன்றினால் பாஸ் கட்சியிடம் ‘வேண்டுமென்றே கசியவிடப்பட்டது’ என பாஸ் உதவித் தலைவர் ஹுஸாம் மூசா கூறிக் கொண்டுள்ளார்.
“எங்களுக்கு அந்தத் தகவல் அப்படித் தான் கிடைத்தது. அந்தத் தகவல்
கசியாவிட்டால் அதனை அறிந்து கொள்வது சிரமமாக இருக்கும்,” என அவர் நிருபர்களிடம் கூறினார்.
அந்தத் தகவலைத் தந்த தரப்பின் அடையாளத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது ஹுஸாம் அதனைச் செய்ய மறுத்து விட்டார்.
அந்த விவகாரத்தை திரங்கானு மந்திரி புசார் அகமட் சைட் உறுதி செய்துள்ளது ‘சாதகமானது’ என வருணித்த அவர், அந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதை வரவேற்பதாகச் சொன்னார்.