அல்விவி ஜாமீன் கோரி மறு ஆய்வு விண்ணப்பத்தைச் சமர்பித்தார்

1 duoசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அல்வின் தான், விவியன் லீ ஜோடி, தங்களது  ரமதான் bak kut teh வாழ்த்து, ஆபாசப் படங்கள் மீது மூன்று தங்களுக்கு எதிராக  மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பின்னர் தங்களுக்கு ஜாமீன்  வழங்குவதில்லை என செஷன்ஸ் நீதிமன்றம் எடுத்த முடிவை மறு ஆய்வு செய்ய  வேண்டும் எனக் கோரி இன்று ஒர் விண்ணப்பத்தைச் சமர்பித்துள்ளனர்.

உயர் நீதிமன்ற கிரிமினல் பதிவகத்தில் பிற்பகல் மணி 3.50 வாக்கில் அந்த  விண்ணப்பத்தைத் தாம் சமர்பித்ததாக அவர்களுடைய வழக்குரைஞர் சூங் ஜு  தியான் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பொது நலனைக் கருத்தில் கொண்டு தான் ஜேய் யீ (25 வயது) என்ற முழுப்  பெயரைக் கொண்ட தான் -னுக்கும் லீ மே லிங் என்ற முழுப் பெயரைக் கொண்ட  லீ-க்கும் (24 வயது) ஜாமீன் வழங்க செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முர்தாஸாடி  அம்ரான் நேற்று மறுத்து விட்டார்.

தான் தற்போது சுங்கை பூலோ சிறைச்சாலையிலும் லீ காஜாங் சிறைச்சாலையிலும்  தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.