சீனாவின், பீஜிங் சர்வதேச விமான நிலையத்தில், நேற்று குண்டு வெடித்தது. இதில் ஒருவர் காயமடைந்தார்.
சக்கர நாற்காலியில் இருந்த நபர் ஒருவர் பட்டாசு வெடிமருந்து அடங்கிய பொதியொன்றை வெடிக்க வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கறுப்பு நிற தலைமுடிக் கொண்ட மனிதர் ஒருவர் வெள்ளைநிற பொதியொன்றை அசைத்துக் காண்பித்தபடி அதனை வெடிக்கவைக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
சக்கர நாற்காலி ஒன்றுக்கு அருகே விழுந்துகிடக்கும் நபர் ஒருவருக்கு அதிகாரிகள் சிகிச்சை அளிக்கும் படங்களும் பின்னர் வெளியாகியுள்ளன.
காயப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து டர்மினல் -3 எங்கும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
உள்ளூர் நேரப்படி மாலை 6.30க்கு சற்று முன்னதாக, டர்மினலின் வெளியேற்றப் பாதையொன்றுக்கு அருகே இந்த வெடிச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மருத்துவ பணியாளர்கள் பலர் அவசர சிகிச்சைகளை அளித்துக் கொண்டிருப்பதையும் சம்பவ இடத்தில் போலிஸ் அதிகாரிகள் குவிந்திருப்பதையும் காட்டும் படங்களை சீனாவின் அரச ஊடகமான சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறுகிறது. -BBC