பினாங்கு மாநிலத்தின் பொதுப் போக்குவரத்து முறையில் 2014 முடிவதற்குள் மேலும் 200 புதிய பேருந்துகளைச் சேர்க்க திட்டமிடப்படுகிறது.
இதனைத் தெரிவித்த ரெபிட் பினாங்கு தலைமை நடவடிக்கை அதிகாரி முகம்மட் ஷுக்ரி அப்துல் ரஹ்மான், முதல் கட்டமாக இவ்வாண்டு இறுதிக்குள் 80 புதிய பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என்றார்.
“அடுத்த ஆண்டில் மேலும் 120 புதிய பேருந்துகள். அவற்றில் 40 இரண்டு அடுக்கு பேருந்துகள். இப்போதைக்கு பினாங்கு முழுக்க 46 வழித்தடங்களில் 316 பேருந்துகள் ஓடுகின்றன”, என்றாரவர்.