இலங்கை உட்பட்ட நாடுகளில் காணாமல் போனோர் தொடர்பில் புதிய மற்றும் எஞ்சியுள்ள முறைப்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிபுணர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நியூயோர்க்கில் கூடிய ஐக்கிய நாடுகளின் பலவந்த நிலையிலான காணாமல் போதல் தொடர்பான குழு, கடந்த 6 மாதங்களில் முறைப்பாடு செய்யப்பட்ட இலங்கை, பாகிஸ்தான் உட்பட்ட 25 நாடுகளின் காணாமல் போன 400 சம்பவங்கள் குறித்து ஆராய்ந்தது.
இதனையடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பலவந்த நிலையில் காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு தலைவர் பிரான்ஸை சேர்ந்த ஒலிவர் டி பரோவலி, தமது குழு காணாமல் போனோரின் உறவினர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று பரோவலி தெரிவித்துள்ளார்.