மசீச, கெராக்கன் ஆகியவற்றுடன் இணையும் நடவாத காரியம் என்கிறது சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி (எஸ்யுபிபி). அவற்றுக்கிடையில் பிரச்னைகளும் வேறுபாடுகளும் நிறைய இருப்பதாக அது கூறிற்று.
ஆனால், பிரச்னைகள் என்னவென்பதை அது விவரிக்கவில்லை.
“அவை சீனர்களை க் கொண்ட கட்சிகள். நாங்கள் பல-இனங்களைக் கொண்ட கட்சி”, என்று மட்டும் எஸ்யுபிபி தலைவர் பீட்டர் சின் கூறினார்.
அவை மூன்றும் ஒன்றிணையும் பேச்சு 1980-களிலேயே தொடங்கி நின்றுபோனது. இப்போது மீண்டும் அடிபடுகிறது