தமிழ்க் கூட்டமைப்புடன் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

eelam24713bதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், இலங்கையிலுள்ள அந்நாட்டின் தூதர் அலுவலகத்தின் உயரதிகாரிகளும் இருந்தனர்.

கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சிறீதரன் ஆகியோர் பங்குபெற்றனர்.

பேச்சுவார்த்தைகளின் போது இலங்கையின் வடபகுதியில், போருக்கு பின்னரான காலத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கை மற்றும் வாழ்வாதார நிலைமைகள், மாகாண சபைத் தேர்தல்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

பல பகுதிகளில் இராணுவம் தொடர்ந்து மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ளதாவும், இதன் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாத ஒரு சூழல் உள்ளது என்றும் தமது தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் சிறீதரன் கூறுகிறார்.

வடமாகாண சபைத் தேர்தலின் மூலமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களுக்களுக்காக தனியான ஒரு ஆட்சியை நடத்தும் நிலைப்பாட்டில் இருப்பதாக பிரிட்டிஷ் தரப்பினருக்கு சிலர் கூறியதாகவும், அது குறித்தும் விவாதம் இடம்பெற்றதாகவும் கூறிய சிறீதரன் அவர்கள், இந்தியா மற்றும் சுவிஸ் போன்ற நாடுகளில் உள்ள சமஷ்டி முறையை ஒத்த, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சி மற்றும் அதிகாரப் பரவலாக்கத்தையே தாங்கள் விரும்புவதாவும் அவர்களிடம் தெரிவித்ததாகவும் கூறினார். -BBC

TAGS: