கோலா பெசுட் இடைத் தேர்தல்: வாக்களிப்பு சுறுசுறுப்பாக நடைபெறுகிறது

undiஇன்று கோலா பெசுட் இடைத் தேர்தலின் வாக்களிப்பு நாள். அத்தொகுதியில் பிஎன் வேட்பாளராக தெங்கு ஸைஹான் சே கு அப்துல் ரஹ்மானும் பாஸ் வேட்பாளராக அஸ்லான் யூசுப்பும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரைத் தங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுப்பதில் அத்தொகுதியின் 17,713 வாக்காளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

காலை 10. மணிவரை 5,147 பேர் வாக்களித்திருக்கிறார்கள். இதைத் தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அசீஸ் யூசுப் அறிவித்துள்ளார்.

தேர்தல் முடிவு இரவு 10 மணிக்குப் பிறகுதான் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.