கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், அன்வாரின் வழக்குரைஞர் குழுவுக்கு செலவுத் தொகையாக ரிம1,000 கொடுக்கும்படி சட்டத்துறை தலைவர் (ஏஜி) அலுலகத்துக்கு உத்தரவிட்டது.
முன்னாள் உள்துறை அமைச்சர் சைட் அமிட் அல்பாருக்கு எதிராக மாற்றரசுக் கட்சித் தலைவர் தொடுத்துள்ள அவதூறு வழக்கின் விசாரணையைச் சட்டத்துறை தலைவர் அலுவலகம் தாமதப்படுத்துவதாக நீதிபதி நிக் ஹஸ்மட் நிக் முகம்மட் கூறினார்.
இன்று அவ்வழக்கு விசாரிக்கப்படுவதாக இருந்தது.
அது 2008-இல் தொடுக்கப்பட்ட வழக்கு. தம்மை அமெரிக்க உளவாளி என்று வருணித்ததற்காக அன்வார் உள்துறை அமைச்சர்மீது அவ்வழக்கை தொடுத்தார்.