இலங்கைக்கான பயனத்தின் பின்னர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அது தொடர்பில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் அறிக்கை சமர்ப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 24வது அமர்வு செப்டம்பர் 9 முதல் 27ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 25ம் திகதியன்று இலங்கைக்கு வரும் நவநீதம்பிள்ளை ஆகஸ்ட் 31ம் திகதியன்று கொழும்பில் நடத்தப்படும் செய்தியாளர் சந்திப்புடன் தமது விஜயத்தை முடித்துக்கொள்வார்.
இதன்போது அவர் போருக்கு பின் இலங்கையில் இடம்பெற்று வரும் முன்னேற்றங்களை கண்கானிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் நவநீதம் அறிக்கை சமர்ப்பிப்பார்!
இலங்கை ஐக்கிய நாடுகள் அவையின் வல்லுநர் குழு அறிக்கை 2011றில் எழுதி வெளிட்டார்கள் அதில் பான் கீ மூன், யாஸ்மீன் சோக, மர்சுக்கி தருச்மன், ஸ்டீவன் ரத்னர் போன்றோர் சானல் 4வின் அவனபடங்களின் உண்மைகளை ஆதரித்தும் இன்று வரை ஒன்றுமில்லை இதில் நவநீதம்பிள்ளை என்ன கண்டறிந்து சாதிக்க போகிறார்? ஐநா அறிக்கை முக்கிமானதுதான் அனால் அதுவே தமிழ் ஈழம் மீதான முக்கிய பாதை இல்லை என்று கூறிவிட்டபின் இன்னும் international Independant group of Eminent persons கொண்ட 11 குழுவில் India high court judge P.N பகவதிக்கு ஸ்ரீ லங்கா அரசு எதையுமே செய்ய முன்வரவில்லை தெரியுமா?