துப்பாக்கியால் சுடப்பட்டு சிரம்பான் துவாங்கு ஜாப்பார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த மைவாட்ச் தலைவர் ஆர்.ஸ்ரீசஞ்சீவன், செர்டாங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மூன்று போலீஸ் வாகனங்களின் பாதுகாப்புடன் அம்புலன்ஸ் வண்டி ஒன்றில் மாலை மணி 4.30க்கு அவர் செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்.
உடனடியாக அவசரச் சிசிச்சை பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது அறைக்கு வெளியே இரண்டு போலீஸ்காரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
குடும்பத்தினரைத் தவிர, ஊடகங்களோ, பொதுமக்களோ அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
யார் யாருக்காகவோ கோவிலில் படுத்துக் கிடந்து கொடிபிடித்து நிற்கும் நம் சகோதரர்கள், விரைவில் குணமடைய இந்த சஞ்(சீவன்)னுக்காக மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள். நன்றி