முன்னோட்டத்தின் அடிப்படையில் ‘புதுக் கிராமம்’ திரைப்படம் பற்றி தீர்ப்புக் கூறுவது நியாயமாகாது என தொடர்பு, பல்லூடக அமைச்சர் அகமட் சாப்ரி சிக் கூறுகிறார்.
அதன் தலைவிதி குறித்து ‘நியாயமான’ முடிவு எடுக்கப்படுவது முக்கியம் என அவர் சொன்னார்.
‘தண்டா புத்ரா’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த பின்னர் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் ‘அளவுக்கு அதிகமாக பரபரப்பு’ அடைந்து விட்டதால் ‘புதுக் கிராமம்’ திரைப்படத்துக்கு அம்னோ இளைஞர் பிரிவும் அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது தமக்கு வியப்பைத் தரவில்லை எனச் சாப்ரி குறிப்பிட்டார்.
“நான் முழுத் திரைப்படத்தை பார்க்கவில்லை. ஆகவே நான் பார்க்காத ஒன்றின் மீது கருத்துச் சொல்வது நியாயமல்ல.”
“என்றாலும் நியாயமற்ற முறையில் நடந்து கொள்கின்றவர்களும் இருப்பதை நான் அறிவேன். ஆனால் அது தலைவர்களுடைய தவறு.”