சுகாதார அமைச்சர்: பினாங்கு மருத்துவர்கள் இனவாதிகள் அல்ல

malayபினாங்கில் மலாய் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இனவாத மருத்துவர்கள்  ‘மறுத்துள்ளதாக’ கூறப்படும் புகார்களை சுகாதார அமைச்சு விசாரித்துள்ளது.

அந்த விஷயத்தில் இனவாத அம்சம் ஏதுமில்லை என சுகாதார அமைச்சர் டாக்டர்  எஸ் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

“அது இனவாதமாகத் தெரியவில்லை. என்றாலும் தொடர்புகள் மோசமாக  இருந்ததற்கான அம்சங்கள் காணப்படுகின்றன. மருத்துவர்கள் நோயாளிகளுடன்  நல்ல முறையில் தொடர்பு கொள்ளவில்லை,” என அவர் சொன்னார்.malay1

“மருத்துவர்கள் மலேசியச் சீனர்களாகவும் நோயாளிகள் மலாய்க்காரர்களாக  இருந்ததும் தற்செயலானதாகும்.”

பினாங்கில் நேற்றிரவு பினாங்கில் 180 மாநில மஇகா கிளைத் தலைவர்கள் கலந்து  கொண்ட விருந்து நிகழ்ச்சிக்குப் பின்னர் சுப்ரமணியம் நிருபர்களிடம் பேசினார்.