13வது அரசியல் அமைப்பை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா மட்டுமல்ல இலங்கையும் காரணமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெ நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த கருத்தை வெளியிட்டது.
இந்திய அழுத்தத்தின் மத்தியிலேயே 13வது அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட்டதாக இலங்கையின் கடும் போக்காளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும் 1985 – 86 ஆம் ஆண்டுகளில் இனப்பிரச்சினை தீர்வுக்காக இந்தியா இலங்கை அரசாங்கங்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் நடத்திய பேச்சுக்களின் அடிப்படையிலேயே 13வது அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட்டதாக நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக 1940ம் ஆண்டில் டொனமூர் அரசியல் ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி தேசியப்பிரச்சினைக்கு மாகாணசபைகள் திட்டம் கொண்டு வரப்பட்டது.
எனினும் 1955ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் சொக்ஸி ஆணைக்குழு, பிராந்திய சபைத்திட்டத்தை பரிந்துரைத்தது. 1957 ஆம் ஆண்டு இதற்காக பண்டா – செல்வா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
ஆனால் சிங்கள அரசியல் காரணமாக இந்த உடன்படிக்கை செயலிழந்து போனதாக நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.