கல்வி அமைச்சு, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் வழங்கப்படும் பயிற்சிமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் வலியுறுத்தியுள்ளார்.
முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே இனங்கள் தனித்தனியே பிரிந்து நிற்பதற்குக் காரணமாக இருப்பது ஏமாற்றமளிப்பதாக அவர் சொன்னார்.
மலேசியாகினியிடம் பேசிய அவர், “ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் உள்ளவர்களுக்கு ‘மலேசிய நாகரிகம்’ கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்”, என்றாரவர்.
மலேசியாவைப் பொருத்தவரை மலேசிய நாகரிகம் என்று ஒன்று இல்லை. நம்மைப் பொறுத்தவரை இஸ்லாமிய நாகரிகம் மட்டும் தான்! மலேசிய நாகரிகம் என்று ஒன்று இருந்தால் தானே அதைப் பற்றிப் பேசுவதற்கு!
தற்பொழுது மலேசியா இஸ்லாமியர்களின் போதனையில் பிற மதங்களிடையே சமத்துவம் பற்றிய போதனை தேவை … தீவிரவாதம் ஒருபோதும் நல்லதை கொண்டு வரும் என்று கனவு கண்டிருந்தால் முடிவில் பிளவு மரணம் தான் மிஞ்சும் ..இது இஸ்லாமிய நாடுகளில் நாடாகும் செயல்களில் வழி கற்று கொள்ளவும் ..இந்த மலேசியா உருவாகுவதற்கு கிறிஸ்து,ஹிந்து, புத்த மதம் சார்தவர்களின் ஒத்தழைப்பு இன்றி உருவாக இல்லை என்பதை இஸ்லாமியர்கள் மறந்து போனது ஏன் ?