தமிழினத்தின் ஒற்றுமையை மீண்டும் ஒரு தடவை கனடா தமிழர் நிரூபிப்பார்களா?

kerupaகனடாவின் ஒன்ரேரியா மாநிலத்தின் ஐந்து தொகுதிகளில் நடைபெற இருக்கும்; தேர்தலில் ஸ்காபுறோ கில்வூட் பகுதியில் தமிழரான கென் கிருபா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக மாகாண முதல்வவரான கெத்தலினும் மற்றும் அக் கட்சியை சேர்தவர்களும் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர்.

உயர் திரு கென் கிருபா அவர்கள் சிறந்த சமூகசேவையாளரும் நாட்டுபற்றுள்ளவரும் மனிதநேயம்மிக்க பண்பாளருமாவார் அப்பெருமகனை வெற்றி பெறவைப்பதன் மூலம் எமது ஒற்றுமையை இந்த பூமி பந்தின் புத்தி ஐpவிகளுக்கும் வல்லரசுகளை வழிநடத்துவோருக்கும் உணர்த்துவோம்.

கென். கிருபா வெற்றி பெறுவதென்பது உறுதியாகிக்கொண்டிருந்தாலும் அத்தொகுதியில் உள்ள தமிழர்களுடைய வாக்குகள் ஒன்றேனும் வீன் போகாது. ஒட்டுமொத்த அத்தொகுதி தமிழர்கள் வாக்கும் அவருக்கு கிடைப்பதன் மூலமே எமது உள்ளார்ந்த ஒற்றுமையை உணர்த்தமுடியும்.

அத்தொகுதியில் வாழும் தமிழர்கள் மாத்திரம் இன்றி உலகத்தில்
உள்ள தமிழர்கள் எல்லோரும் தங்கள் துறைசார்ந்த (இன்டர்நெட், பேஸ்புக், ஊடகங்கள்) வழிகளின் மூலம் அத்தொகுதி அனைத்தின மக்களையும் அவருக்கு வாக்களிக்கும்படி கோரவேண்டும்..

அத்தொகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்துக்களிடம் கென் கிருபா ஒரு இந்து என்று எடுத்தியம்பி அவர்கள் வாக்குகளை கோரவேண்டும். (எம்மினம் ஈழத்தில் இறந்து கொண்டிருந்தபோது இந்துக்கள் இறக்கிறர்கள் என்பதனை பிரச்சாரம் செய்யாது விட்டதனால் தமிழர்கள்தான் சாகிறார்கள் எனநினைத்து இந்தியமக்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள்.)

கென். கிருபா அதிக வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற அனைத்து தமிழர்களும் தங்களால் இயலுமான வழிகளில் அத்தொகுதியில் வாழும் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய இனமக்களிடமும் வாக்களிக்கும்படி கோர முன்வரவேண்டும். அதன் மூலமே பெரும் வெற்றியை நாம் சுவைக்க முடியும்..

கென். கிருபாவின் வெற்றி ஒவ்வொரு தமிழர்களின் வெற்றியாக கருத வேண்டும்.

அவரது வெற்றிக்கு உதவமுடியாதவர்கள் இறைவனையாவது பிராத்திப்போம்.

TAGS: