துப்பாக்கிகள் தவறான மக்களுடைய கரங்களில் விழுந்து விடாமல் தடுக்க போலீசார், வழங்கப்பட்டுள்ள எல்லாத் துப்பாக்கி அனுமதிகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என பாஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
அண்மைய காலமாக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அது அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அனுமதி பெற்ற துப்பாக்கி உரிமையாளர்களுடைய அடையாளங்களும்
வெளியிடப்பட வேண்டும் என பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் சொன்னார்.
“துப்பாக்கிகள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நாட்டில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமையாளர்களுடைய நடவடிக்கைகளையும் போலீசார் ஆய்வு செய்ய வேண்டும்.”
“துப்பாக்கி உரிமையாளர்களுடைய அடையாளங்களை வெளியிடுவதற்குச் சட்டம் அனுமதித்து பாதுகாப்புக்கு மருட்டல் ஏற்படாது எனத் தெரிந்தால் அதனைச் செய்யலாம்,” என துவான் இப்ராஹிம் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.