AmBank வங்கி கொலையில் ‘நான்கு கண் பையனை’ போலீஸ் தேடுகின்றது

murderAmBank வங்கி நிறுவனர் ஹுசேன் அஹமட் நாஜாடி கொலையுண்ட சம்பவத்தில்  சந்தேகிக்கப்படும் நபருடைய உருவப்படங்களை போலீசார் திங்கட்கிழமை  வெளியிட்டுள்ளனர். அவை கேமிரா ஒளிப்பதிவுகளிலிருந்து பெறப்பட்டவையாகும்.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள அந்தச் சம்பவத்தில்  சந்தேகிக்கப்படும் முக்கிய நபர், ‘Sei Ngan Chai’ (நான்கு கண் பையன்) அல்லது  Jian என முகநூல் பக்கத்தில் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகம் கூறியுள்ளது.murder1

அந்த நான்கு மேமிரா ஒளிப்பதிவு படங்களிலும் உயரமான நெற்றியைக் கொண்ட  ஒர் ஆடவர் காணப்படுகின்றார். அவர் கறுப்பு நிற ஒரத்தைக் கொண்ட மூக்குக்  கண்ணாடியை அணிந்துள்ளார். அவர் கட்டம் போடப்பட்ட கறுப்பு வெள்ளை  சட்டையையும் அணிந்துள்ளார்.

சந்தேகத்துக்குரிய அந்த நபரை அறிந்தவர்கள் அல்லது அவரைப் பற்றிய
தகவல்களை தெரிந்தவர்கள், 03-2146 0685 என்ற தொலைபேசி எண்ணில்  கோலாலம்பூர் போலீசாருடன் தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது Rakan Cop  உடனடித் தொலைபேசி எண் 03-2115 9999 =உடனும் தொடர்பு கொள்ளலாம் என  போலீசார் தெரிவித்தனர்.

32728 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியையும் பொது மக்கள் அனுப்பலாம்  அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கும் செல்லலாம்.