நாய்கள் சூழ்ந்திருக்க ஹரி ராயா வாழ்த்துக் கூறுவதுபோல் காணொளி பதிவிட்டிருந்த நாய் பயிற்றுனர் மஸ்னா முகம்மட் யூசுப் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது புக்கிட் அமானில் பிடித்துவைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார்.
போலீசின் சிறப்புப் பிரிவினரும் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணைய (எம்சிஎம்சி) அதிகாரிகளும் தம்மை விசாரித்ததாக அவர் தெரிவித்தார்.
“அந்தக் காணொளியை (மூன்றாண்டுகளுக்குமுன்) பதிவிட்டதன் நோக்கம் பற்றியும் மற்றவை பற்றியும் விசாரித்தனர்”, என்றாரவர்.
அடுத்தவன் பிள்ளையை நோன்டிப்பார்தால், தன் பிள்ளை தானாக ….விடும் ! எல்லா உயிர்களையும் உயிராக மதித்தால் உலகில் உயர்ந்து வாழலாம். இறைவன் படைப்பில் எல்லோரும் வாழ்வதற்கே . பிரித்தாளும் மனம் மனிதனுக்கே !
நாய் பயிற்றுனரை பிடிக்க ராகெட் வேகத்தில் சென்ற போலிஸ் ! கேண்டின் மற்றும் பாலேக் இந்திய பலேக் சீனா விஷயத்தில் தாமதம் ஏனோ ? அருமையான போலிஸ் !
இனி இந்த நாட்டிலே நாயே இருக்கக்கூடாதுனுகோட சொன்னாலும் சொல்லுவாங்க…!