முல்லைத்தீவு – முள்ளியவளை கிராமத்தில் காடழித்து முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கை முடக்கப்பட்டதன் பின்னர் குமிழமுனை கிராமத்தையொட்டிய பகுதியில் 30 ஏக்கர் காட்டை அழித்து முஸ்லிம் மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆதரவாளர்களால் இந்த காடழிப்பும், குடியேற்றமும் நடத்தப்படுவதகவும், அவரின் ஆதரவாளர்களான ஜக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் ஜெனோபன், மற்றும் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனை ஏ.ஓ ஜவாஸ், மற்றும் அமைச்சரின் அமைப்பாளர் சீராஸ் ஆகியோரே இந்தக் காடழிப்பு நடவடிக்கையினை நேரடியாக பலத்த பாதுகாப்புடன் கன ரக வாகனங்கள் மூலம் கடந்த 3 நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து குமிழமுனை கிராம அபிவிருத்திச் சங்கம், மற்றும் முல்லைத்தீவு மாவட்ட டபிள்யூ.ஆர்.டி.எஸ் ஆகியனவும் மாவட்டச் செயலரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் குற்றம்சாட்டியிருப்பதுடன், இந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.