எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
வடமாகாண சபைக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று அரசாங்க கட்சிகள் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இன்று மாலை யாழ்.கொழும்புத்துறைப் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சிவில் உடையில் சென்ற இராணுவத்தினர் பொது மக்களிடம் அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
ஏன்? மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களிக்க மாட்டார்களா? என்று அச்சுறுத்தும் தொனியில் மக்கள் மத்தியில் கொச்சைத் தமிழிலில் இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளனர்.
சில இடங்களில் வெற்றிலைக்கு வாக்களியுங்கள் என்றும் வெற்றியின் சின்னம் வெற்றிலை என்றும் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரது இச்செயற்பாடு காரணமாக அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
இம்முறை தேர்தலில் இராணுவத்தினர் பாரிய மோசடிகளை மேற்கொள்ளப் போகின்றனர் என்பதற்கான ஆரம்ப புள்ளியாக இராணுவத்தினரது பிரச்சார நடவடிக்கைகள் உள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.