அதிகமாக வாக்குகளைப் பெற்றாலும் முதலமைச்சர் பதவி வழங்கப்படமாட்டாது – ராஜபக்‌ஷ

rajaநடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவியை வழங்குவது தேர்தலின் பின்னரே என மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இதற்கு அதிகபட்சமாக குறித்த மாவட்டத்தில் அதிகமான விருப்பு வாக்குகள் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன் அவர் அதிகபட்ச விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் அவரது சுய நிலைமையை பரிசீலனை செய்தே முதலமைச்சர் பதவி வழங்கப்படுமென மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று (30) ஊடகங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். தயாசிறி ஜயசேகர அரசாங்கத்துடன் இணைந்ததை அடுத்து வடமேல் மாகாணசபையின் முதலமைச்சர் யார் என ஊடகங்களின் பிரதானிகள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியில் இருந்து மேலும் சில உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு வரவிருக்கின்றனரா என கேள்வி எழுப்பியதற்கு, ஜனாதிபதி புன்சிரிப்புடன் அவ்வாறு உறுப்பினர்களை அரசாங்கத்திற்குள் எடுப்பதற்கான கதவை தற்போது தற்காலிகமாக மூடிவைத்துள்ளதாக கூறினார்.

எனினும் பிரதேசவாரியாக அரசுடன் இணையும் பிரதிநிதிகளுக்கு வருவதற்கான கதவு திறந்தே இருக்கிறது என மஹிந்த ராஜபக்ஷ இதன்போது மேலும் கூறினார்.

TAGS: