ராயா வாழ்த்து காணொளியில் நாய்களுடன் காட்சியளிப்பவர் செகாமாட் அனுப்பப்படுகிறார்

1 hariநாய்கள் உடன் வைத்துக்கொண்டு ஹரி ராயா வாழ்த்துக் கூறும் காணொளியைப் பதிவேற்றிய நாய் பயிற்றுனர் மஸ்னா முகம்மட் யூசுப், இன்று விசாரணைக்காக  செகாமாட் அனுப்பப்படுவார்.

தாங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள புகார் செகாமாட்டில் செய்யப்பட்டது என்பதால்  அங்கு அவர் அனுப்பப்படுவதாக போலீஸ் தெரிவித்தது என மஸ்னாவின் வழக்குரைஞர் என். சுரேந்திரன் கூறினார்.