சஞ்சீவன் தேறி வருகிறார், ஆனால் அறுவை சிகிச்சைக்கு தயாராக இல்லை

1 sri saகுற்றச்செயல்களைக் கண்காணிக்கும் என்ஜிஓ-வான மைவாட்ச் அமைப்பின் தலைவர் ஆர்.சஞ்சீவனின் உடல் நிலை சீரடைந்து வந்தாலும், விலா எலும்பில் சிக்கிக்கொண்டிருக்கும் துப்பாக்கி குண்டை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு அது தயாராக இல்லை எனச் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார்.

“அறுவை சிகிச்சை செய்யப்படாமல் இருப்பதற்குத் துப்பாக்கிக் குண்டு காரணமல்ல. குண்டு உள்ள இடம் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதால் அதை அடைவது பிரச்னையாக உள்ளது”.

இது, மருத்துவ காரணங்களால் ஏற்பட்ட தாமதமே தவிர, வேறு ஒன்றுமல்ல என்றாரவர்.