மசீச அடிநிலை தலைவர்களின் அணி ஒன்று கட்சித் தலைவர் சுவா சொய் லெக்கை பதவியிறக்கும் இயக்கமொன்றைத் தொடங்கியுள்ளது.
அரசாங்கப் பதவி ஏற்கக்கூடாது என்ற கட்சியின் நிலைபாட்டை மீறியதற்காக சுவாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அது கட்சியின் ஒழுங்கு வாரியத்தைக் கேட்டுக்கொண்டது.
சுவா, பினாங்கு துறைமுக ஆணையத் தலைவராக இருப்பதை அது சுட்டிக்காட்டியது.
இது பற்றிக் கட்சி பாதுகாப்பு குழு 3.0-உம் எட்டு தொகுதித் தலைவர்களும் கட்சி தலைவர் மன்றத்துக்குக் கடிதம் எழுதுவார்கள் என வங்சா மாஜு தொகுதித் தலைவர் இயு தியோங் லூக் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.
அது பலிக்காவிட்டால், அவசரப் பொதுக்கூட்டம் கூட்டி அதில் தலைவர்மீது குற்றம்சாட்டப்படும்.