மசீசவில் தமக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருப்பது குறித்து கருத்துரைக்க முனைந்த அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், துணைத் தலைவர் லியோ தியோங்மீது பாய்ந்தார்.
“தலைவராகக் காத்திருப்பவர்” என்று அவரை வருணித்த சுவா, லியோ பொறுமையாக இருப்பதுடன் ஒரு கனவான் போலவும் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.
“மசீச தேர்தல் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் நடக்கும். அப்போது எல்லாவற்றுக்கும் தீர்வு காணப்படும். அதற்குள் ஆவேசம் கொண்டு ஆடக்கூடாது”, என்று மலேசியாகினியிடம் சுவா தெரிவித்தார்.