தமிழ் மொழியை உலக மொழியாக மாற்றிய பெருமை தனிநாயகம் அடிகளாரையே சாரும்!

thaniதமிழ்மொழியை உலக ஆய்வு மொழியாக மாற்றியதுடன் அதனை செம்மொழியாக மாற்றிய பெருமை தனிநாயகம் அடிகளாரையே சாரும் என கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அருட்தந்தை நவாஜி அடிகளார் தெரிவித்தார்.

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டையொட்டிய ஆரம்ப விழா நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்றது.

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் அவரது பிறந்த தினத்தின் நூறாவது ஆண்டு பூர்த்தியை நினைவு கூறுமுகமாக இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாச் சபையின் தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.துரைராஜசிங்கம், அருட்தந்தை ஏ.நவாஜி உட்பட முக்கியஸ்த்தர்கள், பிரமுகர்கள் நூற்றாண்டு விழாச் சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, தனிநாயகம் அடிகளாரின் உருவப்படம் விழா மண்டபத்தில் வைக்கப்பட்டு அவ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ்வாண்டு நவம்பர் மாதம் இவரின் நூற்றாண்டு விழா மட்டக்களப்பில் பெருவிழாவாக கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGS: