அதிமுக்கிய புலி உறுப்பினரை ரகசியமாக நாடு கடத்தியது இந்தியா!

former-ltte-deportவிடுதலைப் புலிகளின் முக்கியமான உறுப்பினர் ஒருவரை, இந்தியா ரகசியமாக இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மும்பை விமான நிலையத்தில் வைத்து 35 வயதாகும் சதீஷ் குமார் என்பவரை இந்திய கிரைம் பிரிவு பொலிசார் கைதுசெய்திருந்தார்கள்.

அவர் மும்பை விமான நிலையத்தில் இருந்து நைரோபி என்னும் நாட்டிற்கு பயணிக்கவிருந்த வேளையே அவரை இந்தியப் பொலிசார் கைதுசெய்தார்கள். சதீஷ் குமார் இந்தியாவில் எக் குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை.

இருப்பினும் இலங்கையில் அவர் தேடப்பட்டு வந்தார். அவர் ஏற்கனவே இலங்கையில் இருந்து தப்பி, இந்தியா சென்றிருந்தார். அவர் இலங்கைக்குச் செல்லும் பட்சத்தில், சித்திரவதைகளுக்கு உள்ளாகலாம் மற்றும் கொலைசெய்யப்படலாம் என அவரது வக்கீல் வாதாடியிருந்தார்.

இவை எதனையும், கணக்கில் எடுக்காத மும்பை பொலிசார் அவரை திங்கட்கிழமை, இலங்கை புலனாய்வுப் பிரிவினரிடம் கையளித்துள்ளார்கள். மும்பைக்கு வந்த இலங்கை புலனாய்வுப் பிரிவினர் சதீஷ் குமாரை விமானம் மூலம் கொண்டுசென்றுளார்கள்.

மீண்டும் இந்தியா தமிழர்களுக்கு பாரிய தூரகத்தை இழைத்துள்ளது. காங்கிரஸ் அரசாங்கம் இன்றுவரை திருந்தவில்லை என்பதும் அது தொடர்ந்தும் தமிழர் விரோதப் போக்கை கொண்டுள்ளது என்பதனையும் இச் செயல் நன்கு உணர்த்துகிறது. கைதிகளைப் பரிமாறும்போது அவர்கள் நலன் குறித்து குறிப்பிட்ட நாடு அக்கறை செலுத்தவேண்டும் என்று சர்வதேச சட்டங்களில் எழுதப்பட்டுள்ளது. பாரிய ஜனநாயக நாடு என்று தம்மை கூறிக்கொள்ளும் இந்தியா இதுபோன்ற ஈனத்தனமான காரியங்களில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது.

தேவ சதீஷ்குமார் நிலை என்ன என்பது தொடர்பாக இதுவரை எதனையும் அறியமுடியவில்லை. இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இவர் தற்போது இலங்கையில் எப்பகுதியில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்று தெரியவில்லை. இவரை இலங்கை இராணுவம் கொலைசெய்துவிடும் என்ற சந்தேகங்களும் தற்போது எழுந்துள்ளது.

TAGS: