இலங்கையில் உள்ள 9 மாகாண சபைகளின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்படும் என இலங்கை பிரதமர் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாண சகைகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.
இப்பணிகளை பார்வையிட்ட இலங்கை பிரதமர் ஜெயரத்ன நிருபர்களிடம் கூறியதாவது;
இலங்கையில் உள்ள 9 மாகாண சபைகளின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.
இம்மாகாணங்களின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பறிக்க ஏதுவாக, 13வது சட்ட திருத்தத்தில் திருத்தங்கள் கொண்டு வர இலங்கை முயற்சி செய்து வருகிறது.
எனினும் இந்திய அரசின் அழுத்தம் காரணமாக, இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது தேர்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1987ம் ஆண்டு இந்திய அரசின் தலையீட்டின் பேரில், அப்போதைய பிரதமர் ராஜிவ் மற்றும் ஜெயவர்த்தன இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக, இலங்கையில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.
தற்போது அவற்றிக்கு அளிக்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பறிக்க மகிந்தா ராஜபக்ச அரசு முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.