ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்திக்க சந்தர்ப்பம் வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் உள்ள மோசடியான அரசியல்வாதிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு தெளிவுப்படுத்த வேண்டும். யுத்தம் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக சில பிரச்சினைகள் எழுந்துள்ளது.
எனவே போரை வழிநடத்தியவன் என்ற முறையில், அது குறித்து சரியான பதிலை தன்னால் மாத்திரமே வழங்க முடியும் எனவும் இதனால் நவநீதம்பிள்ளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படாதது பிரச்சினைக்குரியது.
இராணுவத்தில் உள்ள மோசடியான அதிகாரங்களை பயன்படுத்தி அரசாங்கம், வடக்கில் அரசியல் நடத்தி வருகிறது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையின் நிலைமைகள் குறித்து ஆராய இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.