டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு மறு தேர்தலை நடத்த வேண்டும். அந்தக் கட்சியின் அடித்தட்டு உறுப்பினர்கள் விரும்புவதும் அது தான் என சங்கப் பதிவதிகாரி அலுவலக இயக்குநர் அப்துல் ரஹ்மான் ஒஸ்மான் சொல்கிறார்.
அது தான் சிறந்த முடிவாக இருக்கும் என்றும் கட்சித் தலைமைத்துவம்
வெளிப்படையான போக்கைப் பின்பற்றுவதைக் காட்டுவதற்கும் அது உதவும் என்றும் அவர் சொன்னார்.
எந்த அமைப்பு சம்பந்தப்பட்ட விஷயமும் 1966ம் ஆண்டு சங்கச் சட்டத்துக்கு இணங்க ஆய்வு செய்யப்படுவதாகவும் அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட தரப்புக்கள் வழங்கிய அறிக்கைகள் அடிப்படையில் டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த விவகாரத்தை பொது மக்களுக்கு ஆர்ஒஎஸ் விளக்க வேண்டும் என அந்தச் சட்டம் சொல்லவில்லை என்றும் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.