அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் துன் உசேன், கட்சி தேர்தலை எதிர்நோக்குவதில் தமக்கும் சக உதவித் தலைவர்களுக்கிடையில் அணுக்கமான ஒத்துழைப்பு இருக்கும் என்றார்.
நடப்பு உதவித் தலைவர்களான ஹிஷாமுடின், அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ஷாபி அப்டால் ஆகிய மூவருமே பதவியைத் தக்கவைத்துக்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.
“ஒவ்வோர் ஆண்டும் எங்களுக்குள் அணுக்கமான ஒத்துழைப்பு இருந்தே வந்துள்ளது.
“இது எங்களுக்குச் சாதகமாக உள்ளது. கட்சிக்கும் உதவுகிறது. அதனால் இது தொடர வேண்டும் என்பேன்”, என ஹிஷாமுடின் கோலாலும்பூர், டெர்மினல் பெர்சத்துபாடுவில் செய்தியாளர்களிடம் கூறினார்.