அரேப்- மலேசியன் வங்கியின் நிறுவனர் அஹ்மட் உசேன் நஜாடியைச் சுட்டுக்கொன்றவன் 44-வயது கொங் சுவி குவான் என போலீசார் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இப்போது கொலைக்கான நோக்கத்தைக் கண்டறிவதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
கொலை பற்றித் தகவலளிக்கக் கூடியவர்கள் என்று நம்பப்படும் மூவரைக் கைது செய்திருப்பதாக கேஎல் சிஐடி தலைவர் கூ சின் வா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“இது நிலம் சம்பந்தப்பட்ட விவகாரம்”, என்று கூறிய கூ, கொலையாளி நாட்டுக்குள்தான் இருப்பதாக நம்புகிறார்.
லாக்காப்பில் குகனின் கொலையாளியை போலீஸ் அடையாளம் கண்டு இருக்கிறதா ??இன்னும் பல இந்தியர்கள் லாக்காப்பில் கொலையுண்டார்களே இதையும் போலிஸ் அடையாளம் கண்டு இருக்கிறதா ??