சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்ற தெளிவான அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த தேர்தல் மூன்று மாகாணங்களில் மட்டும் பெறும் வெற்றியல்ல, அது முழு நாட்டுக்கும் கிடைக்க போகும் அரசியல் வெற்றியாக கருதுகிறேன்.
எதிர்க்கட்சி வலுவின்றி இருக்கும் சந்தர்ப்பத்தில் பெறும் வெற்றியை தரம் தாழ்த்தி கொள்ளும் மோதல்ளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.
சகோதரத்துவமான நடந்து கொள்ளுமாறு, ஆளும் கட்சியில் தேர்தலில் போட்டியிடும் சகல உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டத்தை மீறுதல், அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் கட்சியினர் ஈடுபட்டால், அவர்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது.
இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பெலிஸாருக்கும் இடமளிக்கப்படும் என்றார்.