பொருளாதார ரீதியாகவும் வாழ்வாதார ரீதியாகவும் தமிழர்கள் தம்மைத் தாமே உயர்தர்திக் கொள்வதற்குமான சந்தர்ப்பமாக வடக்குத் தேர்தல் அமைவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை வேட்பாளருமான ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.
இதனை தமிழ் மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கோரியுள்ளார்.
மேலும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், இங்குள்ள வர்த்தகர்களின் நலன்களைக் கருதியுமே வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் ஜெயசேகரம் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற உடகவியியலாளர் சந்திப்பிலேயே ஜெயசேகரம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இங்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களதும் துன்பப்படுகின்ற வர்த்தகர்களுடைய நலன்களைக் கருத்திற் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தேர்தலில் போட்டியிடுகிறேன்.
இங்கு பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வணிகர் கழகத்தினூடாக பல்வேறு உதவிகளை வழங்கியிருக்கின்றோம்.
இந் நிலையில் இத் தேர்தலில் போட்டியிடுமாறு கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று வர்த்தக சங்கத்தின் ஆலோசனைகளுக்கமைய வடக்கு தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளேன்.
இத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதன் முலமாக தமிழ் மக்களுக்கு மேலும் பல சேவைகளைச்; செய்யக் கூடியதாக இருக்கும்.
இதன் மூலமாக தமிழ மக்கள் பல்வேறு நனமைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வடக்கு மாகாண சபை அதிகரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தமிழ் மக்கள் கையளிப்பதன் மூலம் வடக்கின் பொருளாதாரத்தையும் தன்னிறைவை பெறச் செய்யும் வகையிலான செயற்திட்டங்களை முன்னெடுப்போம்.
இங்கு வாழ்கின்ற தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் தன்னிறைவு காணும் வகையில் தமிழ் தேசிய கூட்டமமைப்பினை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
அத்துடன் இந்த மாகாண சபையைக் கைப்பற்றுவதன் மூலமாக அரசியல் மற்றும் பொருரளாதார ரீதியான கட்டுமானங்களை பலப்படுத்திக் கொள்ள முடியும்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியானது தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் வாழ்வாதார ரீதியாகவும் தமிழர்கள் தம்மைத் தாமே உயர்தர்திக் கொள்வதற்குமான சந்தர்ப்பமாக அமைந்திருக்கின்ற நிலையில் இதனை தமிழ் மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கூட்டமைப்பின் வேட்பாளர்களையும் அவர்கள் சார்ந்த ஆதரவாளர்களையும் அச்சுறுத்துகின்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் ஏற்கனவே அச்சுறுத்தப்பட்டும் விபரங்கள் திரட்டப்பட்டிருக்கின்ற நிலையில் தற்போது தன்னுடைய விபரங்களையும் திரட்டி உள்ளதாகவும் ஜெயசேகரம் மேலும் தெரிவித்தார்.