மசீச தலைவர் பொறுப்பிலிருந்து தம்மை வீழ்த்தும் இயக்கத்தைத் தொடங்கியுள்ள ‘கட்சியைக் காப்பாற்றும் குழு 3.0’-ல் உள்ளவர்கள் ‘மசீச-வைக் காப்பாற்ற இறைவன் அனுப்பியவர்கள்’ என டாக்டர் சுவா சொய் லெக் கிண்டல் செய்துள்ளார்.
“மசீச-வுக்கு 60 வயதுக்கு மேலாகிறது. கட்சியைக் காப்பாற்றுவதாக யார்
வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். சிலர் மட்டும் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்றால் அவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல என நான் எண்ணுகிறேன்.”
“அவர்கள் இரட்சகர்கள், மசீச-வைல் காப்பாற்ற இறைவன் அனுப்பியவர்கள்,” என அவர் நேற்று நிருபர்களிடம் கூறினார்.
‘கட்சியைக் காப்பாற்றும் குழு 3.0’ம் எட்டு மசீச தொகுதித் தலைவர்களும் அந்த இயக்கத்தைக் கடந்த வாரம் தொடங்கினர். சுவா மீது நடவடிக்கை எடுக்குமாறு அவை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவைக் கேட்டுக் கொண்டன.
அரசாங்கப் பதவிகளை நிராகரிப்பது என்ற கட்சியின் நிலையை மீறி சுவா பினாங்கு துறைமுக ஆணையத் தலைவராக இருந்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டின.