மக்களின் கோரிக்கைகளுக்கு துப்பாக்கி தோட்டக்களில் பதில் வழங்கும் சர்வாதிகார ராஜபக்ஷ ரெஜிமெண்டுக்கு மக்கள் வாக்குகள் மூலம் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான அவர், கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இதனை கூறினார்.
மக்களின் கோரிக்கைகளுக்கு துப்பாக்கி தோட்டக்களினால் பதில் வழங்கும் அரசாங்கத்திற்கு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.
நிராயுதபாணிகளான மக்களை சுட்டுக்கொல்வதை உடனடியாக நிறுத்தி விட்டு, சட்டத்தை உறுதிப்படுத்துமாறு சர்வாதிகார ரெஜிமெண்டுக்கு எச்சரிக்கை செய்தியை வழங்குவதற்கான காலம் வந்துள்ளது.
மீண்டும் ஒரு முறை கிராமங்களுக்குள் புகுந்து இளைஞர், யுவதிகளை உட்பட அப்பாவி மக்களை சுட்டுக்கொல்ல இடமளிக்காதிருப்பது சகலரதும் பொறுப்பும் கடமையுமாகும் என மேலும் குறிப்பிட்டார்.
முட்டிந்தவரை தமிழ் ஈழத்தில் வேறு எந்த கொலைகளும் நடக்காமல் பார்த்துகொள்ளுங்கள். இதுவரை இலங்கையில் நடந்தது கொலை.இதற்கு ஈடாக உனைடேட்னேசன் தமிழ் ஈழம் அமைக்க உதவவேண்டும். கொலைக்கு உடந்தையாக இருந்தவரை தூக்கிலிடவேண்டும்.