கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய குழுவினரை பௌத்த பிக்குமார் வழி நடத்துள்ளமை கண்காணிப்பு கெமராக்களில் பதிவாகியுள்ள படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் அருகில் இருக்கும் முஸ்லிம்களின் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்றிரவு பிக்குகள் தலைமையில் சென்ற குழுவினர் பள்ளி வாசல் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கணக்கூடியதாக இருந்தது.
இதனையடுத்து முஸ்லிம் சிலர் சிங்களவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேற்படி பள்ளிவாசலை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு உள்ளிட்ட பௌத்த அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.