வாக்காளர் பட்டியலில் மேலும் பல “படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்” கண்டு பிடிப்பு

முதலில் “ஆவி வாக்காளர்கள்”, அடுத்து “நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்ட வாக்காளர்கள்”, இப்போதுபல “படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்” கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் வாக்காளர் பட்டியலில் குறைந்தது ஏழு வாக்காளர்கள் படியாக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பெயர், பழைய அடையாளக் கார்டு எண்கள் ஒன்றாகவும் ஆனால் மை கார்டு எண்கள் வேறாகவும் உள்ளன.

வாக்காளர்கள் தங்களது பெயர்களைச் சரி பார்க்கும் தேர்தல் ஆணைய இணையத் தளத்துக்குச் சென்ற போது வாக்காளர் பட்டியலில் அந்த பெயர்கள் இரண்டு முறை காணப்படுகின்றன. அதனால் அவர்கள் தேர்தலில் இரண்டு முறை வாக்களிக்க முடியுமா என்பது தெரியவில்லை.

ஒரு விஷயத்தில் 1479323 என்ற பழைய அடையாளக் கார்டு எண் “குடும்ப உறுப்பினர்கள் சரி பார்க்கும் முறை” பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த எண் இரண்டு முறை சாஆட் பின் சம்சுதீன்என்னும் பெயரில் காணப்படுகிறது. ஆனால் வேவேறு அடையாளக் கார்டு எண்களும்- 380913105681, 510913105553- பதிவு செய்யப்பட்ட முகவரிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த இரண்டு நுழைவுகளும் ஒரே பழைய அடையாளக் கார்டு எண்களைக் கொண்டுள்ளன. ஒரே நாடாளுமன்றத் தொகுதியில்- தித்தி வாங்சாவில்- உள்ளன.  அந்தத் தொகுதியில் பாஸ் கட்சியின் டாக்டர் லோ லோ கசாலி கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் கடந்த மாதம் காலமானார்.

தேசியப் பதிவுத் துறையின் இணைய முறையில் சோதனை செய்த போது மை கார்டு எண் (380913105681) இருப்பதாகத் தெரிந்தது. ஆனால் இரண்டாம் எண் (510913105553) பற்றி எந்த விவரமும் இல்லை.