திரைப்பட தணிக்கை வாரியம் ‘புதுக் கிராமம்’ திரைப்படத்தை மறு ஆய்வு செய்துள்ளதால் அதன் முடிவுகளை நோன்புப் பெருநாளுக்கு முன்னர் அறிந்து கொள்ள முடியும் என அதன் தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர்.
அந்த மறு ஆய்வு முடிவுகளை அதிகாரிகள் இன்னும் தயாரிப்பாளர்களுக்குத் தெரிவிக்கவில்லை என ‘புதுக் கிராமம்’ தயாரிப்பாளரான எட்வர்ட் தீ கூறினார்.
“நாங்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம். நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் பதில் கிடைக்கும் என நம்புகிறோம்,” என அவர் நேற்று தொடர்பு கொள்ளப்பட்ட போது சொன்னார்.
அந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்க முடியாமல் இருப்பதால் நேற்று நடத்தப்படவிருந்த திரைப்பட பகிர்வு நிகழ்வை தயாரிப்பாளர்கள் ரத்துச் செய்து விட்டனர்.