கடந்த தேர்தலில் படுமோசமாக தோல்வி கண்ட மசீச அதன் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண துணிச்சலான தலைவர் தேவை. மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் அக்கட்சியின் உதவித் தலைவர் கான் பிங் சியு இவ்வாறு கூறினார்.
ஒரு அரசியல் கட்சி அதன் கொள்கைகளில் உறுதியாக இருப்பது அவசியம் என்றாரவர்.
“ஒரு தலைவராக விரும்பினால், மக்களின் பிரதிநிதியாக இருந்து பொது விவகாரங்களில் நம் நிலையைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். மசீச, சமூக விவகாரங்களில் மட்டுமல்லாமல், தேசிய அல்லது பொது விவகாரங்களிலும் அதன் நிலைபாட்டை துணிச்சலாக வெளிப்படுத்த வேண்டும்”, என்றவர் வலியுறுத்தினார்.