கிளிநொச்சியில் கூட்டமைப்பினரின் தேர்தல் பிரசார நடவடிக்கையினை படம் பிடித்த புலனாய்வாளர்கள்

tna_election_campaign_001தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் நடை பவனியுடன் கூடிய தேர்தல் பிரசார நடவடிக்கையினை காலை 9 மணியளவில் இரணைமடுச் சந்தியில் ஆரம்பித்து யு9 வீதியூடாக கிளிநொச்சி சந்தை வரையும் மேற்கொண்டு நிறைவு செய்தனர்.

இப்பிரசார நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபை உப தவிசாளர் திரு.வ.நகுலேஸ்வரன், கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள் சு.தயாபரன், சி.சுப்பையா, சி.தவபாலன், மா.சுகந்தன், செ.புஸ்பராசா, த.சேதுபதி, இ.பொன்னம்பலநாதன், ப.குமாரசிங்கம், இளைஞரணித் தலைவர் சு.சுரேன், செயலாளர் கு.சர்வானந்தா, கட்சி செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவினர்,

யு9 வீதியினை அண்மித்த  வர்த்தக நிலையங்கள், வீடுகள், தொழில் நிலையங்கள் ஆகியவற்றுடன் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்கள், கடைகள் ஆகியவற்றிற்கு சமூகமளித்து தமது கட்சி சார்ந்த பரப்புரைகளை மேற்கொண்டதுடன், வாக்களிப்பு முறைமைகள் பற்றியும் மக்களுக்கு விளக்கமளித்தனர்.

மேற்படி பிரசார நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இராணுவப் புலனாய்வினர் அப்பிரசார நடவடிக்கைகளைக் குழப்பும் வகையில் புகைப்படக் கருவி மூலமும் ஒளிப்படக் கருவி மூலமும் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.

மேற்குறித்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரை நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற்று நிறைவடைந்தது என்பதுடன் சென்றவிடமெங்கும் மக்கள் இன்முகத்துடன் வரவேற்று தமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

TAGS: