டிஏபி உதவித் தலைவரும் சிலாங்கூரின் நடப்பு டிஏபி தலைவருமான தெரேசா கொக், எதிர்வரும் கூட்டரசு பிரதேச(எப்டி) டிஏபி தேர்தலில் போட்டியிட தமக்குத் தகுதி இல்லை என்று கூறினார்.
அவரது சிலாங்கூர் டிஏபி தலைவர் பதவி, நவம்பரில்தான் முடிவுக்கு வருகிறது. அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே எப்டி டிஏபி தேர்தல் நடந்து முடிந்து விடும்.
“அப்போது நான் சிலாங்கூரின் தலைவராக இருப்பேன் என்பதால் போட்டி இடுவது முறையல்ல”, என்று கொக் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இதற்குமுன் கொக், எப்டி செயல்குழுவுக்குப் போட்டியிடுவார் என்ற பேச்சு அடிபட்டது.