பார்சலோனா குழுவுக்கும் மலேசியக் குழுவுக்குமிடையில் நட்புமுறை கால்பந்தாட்டத்தை நடத்தியதில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக தெரிய வந்தால் ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்த நிறுவனம் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கான அதன் உரிமம் இரத்துச் செய்யப்படலாம்.
இதனைத் தெரிவித்த இளைஞர், விளையாட்டு அமைச்சார் கைரி ஜமாலுடின், சர்ச்சைக்குரிய அந்தக் கால்பந்தாட்டம் குறித்து விசாரிக்குமாறு விளையாட்டு ஆணையர் அஹமட் ஷப்ரவி இஸ்மாயில் பணிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.