மேடான் துவாங்கு மொனோ மொனோரயில் நிலயத்தையும் சுல்தான் இஸ்மாயில் எல்ஆர்டி நிலையத்தையும் இணைப்பதற்காக ரிம14.2 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டு ஜூலை 8-இல் திறக்கப்பட்ட நடைபாலம் முறையாக செயல்படாமல் பழுதுபட்டிருக்கிறது.
திறக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே பாலத்திலிருந்த பாதி விளக்குகள் எரிவதில்லை என செகாம்புட் எம்பி லிம் லிப் எங்கும் புக்கிட் பிந்தாங் எம்பி போங் கூய் லுன்னும் கூறினர்.
பாலத்தின் இரு புறங்களிலும் உள்ள மின்படிக்கட்டுகளும் மின்தூக்கிகளும் எப்போதுமே வேலை செய்வதில்லை.
ஊழல் தடுப்பு நிறுவனத்திற்கு புகார் செய்ய அந்த மாண்புமிகு எம்.பி. அவர்களுக்கு தோன்றவில்லையோ? வெட்டிப் பேச்சு வேண்டாம். செய்கைகளில் இறங்குங்கள்.