கோத்தபாய ஐ.நாவுக்கு சவால்: அடங்கிப் போகுமா ஐ.நா?

gotabhaya-rajapakseஇலங்கைக்கு எதிராக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க முடியுமா என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஐ.நா சபைக்கு சவால் விடுத்துள்ளார்.

நேற்றுமுன்தினம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் ஆயிரக்கணக்கானோர் காணாமல்போனதாகவும் இலங்கைக்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ. மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர் குழுவான, தருஸ்மன்( ஆயசணரமi னுயசரளஅயn), ரட்னர்( ளுவநஎநn சு. சுயவநெச), ஜஸ்மின் சூகா( லுயளஅin ளுழழமய) ஆகியோர் வெளியிட்ட போர்க்குற்ற அறிக்கைக்கு ஆதாரமாக அமைந்த தரவுகளை தாமதமின்றி வெளியிடுமாறும் அவர் கோரியுள்ளார்.

அறிக்கையின் மூலங்களின் பெயர்களை வெளியிட மறுப்பதால், நிபுணர்குழு அறிக்கை, நீதிமன்றத்தினாலோ அல்லது சிறப்பு விசாரணை பொறிமுறையினாலோ ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கணிப்பீட்டின்படி, இறுதிக்கட்ட யுத்தத்தில் 7400 பேர் கொல்லப்பட்டதாகவும், 2600 பேர் காணாமற்போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட 7400 பேரில், விடுதலைப் புலிகளுக்காக சண்டையிட்டு மரணமானவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.

காணாமற்போன 2600 பேரில், 1600 பேர் விடுதலைப் புலிகளுடன் இருந்தவர்கள். 438 பேர் மட்டுமே, இராணுவக்கட்டுப்பாட்டில் காணாமற்போயுள்ளனர்.

இவற்றில் 28 காணாமற்போன சம்பவங்கள் குறித்தே படையினர் மீது நேரடியாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை இலங்கைக்கு இம்மாதம் விஜயம் செய்யவுள்ள நிலையிலேயே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGS: