பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வாக்களித்ததற்காக பாராம் பகுதியில் உள்ள சரவாக் பிகேஆர் ஆதரவாளர்கள் தண்டிக்கப்படுவதாக அந்த மாநில பிகேஆர் தலைவர் பாரு பியான் கூறிக் கொண்டுள்ளார்.
ரப்பர் சிறுதோட்டக்காரர் மேம்பாட்டு வாரியத்தின் (ரிஸ்டா) வழி அதிகப் பலன் தரும் ரப்பர் கன்றுகளை நடுவதற்கான அவர்களுடைய விண்ணப்பங்கள் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
அவர்கள் பிகேஆர் ஆதரவாளர்கள் என்பதால் ரப்பர் கன்றுகளுக்கான அவர்களது விண்ணப்பங்கள் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பாராம் பகுதியில் பலர் புகார் செய்துள்ளதாக பாரு பியான் குறிப்பிட்டார்.
வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு உதவி செய்யப்படும் என துணை முதலமைச்சரும் விவசாய நவீனமய அமைச்சருமான அல்பிரெட் ஜாபு வாக்குறுதி அளித்திருப்பதை அவர் மாநில அரசுக்கு நினைவுபடுத்தினார்.
ஈபான் சமூக முன்னாள் தலைவர்கள் TAWSLI மற்றும் KALONINGAN காலத்தில் ( கிருஸ்துவ முதல் அமைச்சர்கள் ) எல்லோருக்கும் சம உரிமை , சம வாழ்க்கை வழங்கினார்கள். நல்லாட்சி காலம் அது. ஆனால் ரஹ்மான் யாகோப் முதல்வரானார் பிடிச்சது சனியன் !! அல்பிரெட் ஜாபு, சலஸ்டின் உஜாங்க் ( இரண்டு ஈபான் கூஜாகள் ) பூர்வீக குடிமக்களை அடமானம் வைத்துவிட்டார்கள். தி மு க வில் அன்பழகன் எப்படியோ அப்படித்தானே இந்த கூஜாகள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறது. பிறகு ஏழை மக்கள் என்ன செய்வார்கள் ? அதோகதிதான் .