சர்வதேச சமூகத்திற்கு நல்ல முகத்தை காட்ட அரசாங்கம் முயற்சி

mahinthaஇலங்கையில் நடைபெறவுள்ள இரண்டு முக்கிய நிகழ்வுகளின் நிமித்தம் அரசாங்கம் சர்வதேச நாடுகளுக்கு தமது நல்ல முகத்தை காட்ட முயற்சிப்பதாக சிலோன் டுடே ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் மனிதஉரிமைகள் ஆணையாளர் இலங்கை வருகின்றமை மற்றும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு போன்றவற்றிற்காக அரசாங்கம் தமது முகத்தை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கை மீது மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அரசாங்க உறுப்பினர்கள் மேற்கொண்டு வந்தனர்.

அத்துடன் அரசாங்கம் சர்வதேச நாடுகளின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தாது செயற்பட்டிருந்தது.

ஆனால் சர்வதேச நாடுகளிடையே தாம் தனிமைப்படுத்தப்படுவதை உணர்ந்த அரசாங்கம் தற்போது அதனுடன் இணைந்து செயற்படும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

இதற்காகவே நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தை அரசாங்கம் அனுமதித்துள்ளது.

அத்துடன் தேர்தல் விதிகளை மீறி, அரசாங்கம் வடக்கில் தேர்தல் நடத்துவதாகவும் அறிவித்துள்ளது.

இதேவேளை நவநீதம் பிள்ளையின் இலங்கை வருகையின் போது, அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையில், பல்வேறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.

அத்துடன் கடத்தல், தாக்குதல் சம்பவங்கள் போன்ற நீண்டநாட்களாக விசாரணை நடத்தப்படாமல் இருந்து வழக்குகள், மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவை அனைத்தும் அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்ற எடுத்துள்ள முயற்சிகள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: